அருள்மிகு அஷ்டா தச புஜ மகாலட்சுமி துர்க்கை ,தஞ்சாவூர்
ஸ்ரீ துர்க்கை கவசம்.
கதிரவன் ஒளியே
கண்மணியே வருக
ஜககன ஜககன
தேவியே வருக
திமிதிமி திமிதி
துர்கா வருக
பறையொலி சாற்றி
பண்மிமணி வருக
ஜில்ஜில்
ஜில் என
சிலம்பொலி முழங்க
கால்கள் எனவே
கைவளை குலுங்க
பிரம்பொலி சாற்றி
ப்ராமானி வருக
மாய மயி நீ
சாமுண்டி வருக
வரமது அருளும்
வனமாலி நீயே
தண்டக மண்டல
குண்டல தாரிணி
சாமுண்டேஸ்வரி
துர்கா தேவி
ஸ்ரீ சக்ர ஸ்வரூபிணி
பீதாம்பறியே
என்னை ஆளும்
அன்னை இருக்க
என்னிடர் நீக்கி
தன் மயமாகி
சின்மயானந்த
முத்துரைகாட்டி
சிஷ்டரை காக்கும்
கருணை விழியும்
தயயின் நோக்கும்
கருனாம்ரூதமும்
பாசாங்குசமும்
கரும்பும் வில்லும்
என் சித்தத்துளே
சிவமாய் நின்று
நான் என்ற அகந்தை
கர்வமொழிந்து
அம்புவில் கொண்டு
துன்பம் துடைத்தாள்
அன்புருவில் என்னை
கலந்திட செய்தால்
எத்தனை தொல்லை
எத்தனை அல்லல்
என்பிணி எல்லாம்
எடுத்து விழுங்கி
தீமையக்ற்றும் தீமிதி
வந்தாள் பில்லி
சூன்யம் பெரும் பகை
ஏவல் எல்லாம்
எரித்து நீரது ஆகும்
வல்லமை உள்ள
வலிய பிடாரி
இருளன் காட்டேரி
இத்துன்ப சேனையும்
துர்கா தேவியின்
பெயரை கேட்டால்
துன்பங்கல் யாவும்
துரத்தில் ஓடும்
போட்டி பொறமை
பொடி பொடி யாகும்
பொற்கொடி துர்க்கா
லக்ஷ்மியை கண்டால்
இழிவுகள் நீங்கி
செல்வம் ஓங்கும்
ஓம் என்று ஒலிக்கும்
ப்ரனவஸ்வருபி
ஒன்காரதொலி
உமையவள் வந்தாள்
தன்னை அடுத்தவர்
துன்பம் அகற்றி என்னை
எடுதாட் கொண்டவள்
அன்னை தஞ்சம்
என்றோரை காப்பவள் துர்கா
அன்னை இருக்க்க
எனகினி பயமேன்
என்னிகரில்லை அன்னையே
எல்லாம் புவனம்
முழுவதும் புவநேஸ்வரியாள்
மலை போல்
இடர்கள் பொடி பொடியாகி
மங்கையர்
மனமதை
முடிப்பவள் துர்கா
மணமலர் சூட்டி
மகிழ்வாள் துர்கா
துர்கா பகவதி
என்று நினைத்தால்
துட்டரை அடியுடன்
வேற்றுதிடுவாள்
மலை போல்
துயர்கள் பனி போல் நீங்கும்
விதியும் விலகும்
நிதியும் அளிப்பாள்
மதியும் அவளே
காஞ்சி காமாட்சி
சூலினி மாலினி
கபாலினி மாயே
கேசவசோதரி
துர்கா மாயே
சும்ப நிசும்பினி
துர்கா மாயே
மகேஷசம்ஹாரிணி
துர்கா மாயே
வரப்ரசாதினி
வைகுண்டேஸ்வரி
மாதவசொதறி
மங்களாம்பிகையே
என்னை ஆட்கொண்டு
என்னை ஆதரிபாயே
உன்னையே நம்பி
வாழ்வேன் அம்மா
ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம்.
No comments:
Post a Comment