தந்தையின் உடல்நலம் சீர்பெற - For Daddy to Get well soon from any disease

                                                           
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
        சிவசிவ       

தந்தையின் உடல்நலம் ,மனநலம் சீர்பெறுவதற்கும்.
தனக்கு கிடைக்க வேண்டிய வாய்புகள்
நழுவாமல் இருபதற்கும்,புன்னியபயன்கன்ளைப்
பெறுவதற்கும் ஓதவேண்டிய பதிகம்.
திரு எலுகூற்றுரிருக்கை
இடம்:திருப்ரம்மபுரம்.

இறைவன்: பிரமபுரீசுவரர்                     இறைவி:திருநிலை நாயகி
பண்:வியாழக்குறிஞ்சி [ 1 – 28 ]  இராகம் : சௌராஷ்ட்ரம்
திருச்சிற்றம்பலம்

1.      ஓர்உரு ஆயினை; மான்ஆங் காரத்து
ஈர்இயல்பாய் ஒரு விண்முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்து அளித்து அழிப்ப, மும்மூர்த்திகள் ஆயினை;
இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை.                       5

ஓர்ஆழல் நீழல்,ஒன்கழல் இரண்டும்
முபொழுது ஏந்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை; நாட்டம் மூன்றாகக் கோட்டினை
இருநதி அரவமோடு ஒருமதி சூடினை;
ஒருதாள் ஈரயில் மூவிலைச் சூலம்                         1௦

நாற்கால் மான்மறி, ஐந்தலை அரவம்
ஏந்தினை;காய்ந்த நால்வாய் மும்மதத்து
இருகோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை
ஒருதனு இருகால் வளைய வாங்கி,
முப்ரத்தோடு நானிலம் அஞ்சக்,
கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை
ஐம்புலன் நாலாம் அந்தக்கரணம்,
முக்குணம், இருவளி , ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை;ஒருங்கிய மனதோடு
இருபிறப்பு ஓர்த்து,முப்பொழுது குறை முடித்து               2௦

நான்மறை ஓதி,ஐவகை வேள்வி
அமைத்து, ஆறங்கம் முதல் எழுத்து ஓதி,
வரன்முறை பயின்று,எழுவான்தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை;                                        25

அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;
இகலி அமைத்து உணர்புகலி அமர்ந்தனை;
பொங்கு நாற்கடல்சூல்வேன்குரு விளங்கினை;
பாணி மூஉலகும் புதைய, மேல் மிதந்த
தொநிபுறது உறைந்தனை; தொலையா இருநிதி
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை ;                              30

வரபுரம் ஒன்று உணர்சிபுரத்து உறைந்தனை;
ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்
விரல்கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை;
முந்நீர்த் துயின்றோன்,நான்முகன் அறியாப்
பண்போடு நின்றனை சண்பை அமர்ந்தனை;                  35

ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை;
எச்சன் ஏழிசை யோன் கொச்சையை மெச்சினை;
ஆறுபதமும்,ஐய்ந்து அமர் கல்வியும்,
மறைமுதல் நான்கும்                                       40

மூன்று காலமும், தோன்ற நின்றனை;
இருமையின் ஒருமையும்,ஒருமையின் பெருமையும்
மறுஇலா மறையோர்
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை,
கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்;                       

அனைய தன்மையை ஆதலின், நின்னை
நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே.


திருச்சிற்றம்பலம்!





No comments:

Post a Comment