தாயாரின் உடல் நிலை சீர்பெறுவதற்கு - Mother to get well soon -


தாயாரின் உடல் நிலை சீர்பெறுவதற்கும்,
பிரசவம் சுகமாக அமைவதற்கும், உறவினர்,
நண்பர்களின் தொடர்பு நன்கு அமையப் பெறுவதற்கும்
வீடு, மனை முதலியன செம்மையுறக் கட்டி முடிபதற்கும்
ஓதவேண்டிய பதிகம்


இடம் : திருச்சிராப்பள்ளி                  இறைவன்: தாயுமனேஸ்வரர்

இறைவி : மட்டுவார்குழலம்மை



1.      நன்று உடையானைத், தீயது இலானை, நரைவெள் ஏறு
ஒன்று உடையானைத், உமை ஒருபாகம் உடையானைச்
சென்று அடையாத திரு உடையானைச், சிராப்பள்ளிக்
குன்று உடையானைக் கூற என் உள்ளம் குளிருமே.

2.      கைம் மகவு ஏந்திக் கடுவனொடு ஊடிக் கழை பாய்வான்
செம்முக மந்தி கருவறை ஏறும் சிராப்பள்ளி
வெம்முக வேழத்து ஈர்உரி போர்த்த விகிர்தா, நீ
பைமுக நாகம் மதியுடன் வைத்தல் பழி அன்றே.

3.      மந்தம் முழவம் மழலை ததும்ப, வரை நீழல்
செந்தென் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளிச்
சந்தம் மலர்கள் சடைமேல் உடையார், விடையூரும்
எம்தம் அடிகள், அடியாருக்கு அல்லல் இல்லையே.

4.      துறை மல்கு சாரல், சுனைமல்கு நீலது இடைவைகிச்
சிறை மல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளிக்
கறை மல்கு கண்டன், கனல் எரி ஆடும் கடவுள்ளம்
பிறை மல்கு சென்னி உடையவன், எங்கள் பெருமானே.

5.      கொலை வரையாத கொள்கையர் தங்கள் மதில் மூன்றும்
சிலைவரை ஆகச் சென்றன ரேனும், சிராப்பள்ளித்
தலைவரை நாளும் தலைவர் அல்லாமை உரைபீர்காள்
நிலவரை நீலம் உண்டதும், வெள்ளை நிறம் ஆமே!

6.      வெய்ய தண்சாரல் விரி நிற வேங்கைத் தண்போது
செய்ய பொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார்,
தையல் ஓர் பாகம் மகிழ்வர்; நஞ்சு உண்பர்; தலைஓட்டில்
ஐயமும் கொள்வர்; ஆர் இவர் செய்கை அறிவாரே.

7.      வேய் உயர் சாரல் கருவிரல் ஊகம் விளையாடும்
சேய் உயர் கோயில் சிராப்பள்ளிமேய செல்வனார்
பேய் உயர் கொள்ளி கைவிளக்க்காகக், பெருமானார்,
தீ உகந்து ஆடல் திருக்குறிப்பு ஆயிற்று; ஆகாதே.

8.      மலைமல்கு தோளன் வலி கெட ஊன்றி, மலரோன்தன்
தலை கலன் ஆகப் பலிதிரிந்து உண்பர்; பழி ஓரார்;
சொலவல வேதம் சொலவல கீதம் சொல்லுங்கால்
சில அல போலும், சிராப்பள்ளிச் சேடர் செய்கையே.

9.      அரப்பள்ளி யானும் மலர் உறைவானும் அறியாமை
கரப்புள்ளி நாடி கண்டில ரேணும் கல் சூழ்ந்த சிராப்பள்ளிச்
மேயவார்சடை செல்வர் மனை தோரும் இறப்புள்ளீர்
உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே

10.   நாணாது உடை நீர் தோள்களும் கஞ்சி நாள் காலை
ஊணா பகல் உண்டு ஓதுவார்கள் உரைக்கும் சொல்
பேணாது உறு சீர் பெறுதும் என்பீர் எம்பெருமானோர்
சேனார் கோயில் சிராப்பள்ளிச் சென்று சேர்மினே

11.   தேன் நயம் பாடும் சிராப்பள்ளியானைத்,திரைசூழ்ந்த
கானல் சங்கு ஏறும் கழுமல ஊரில் கவுணியன்,
ஞானசம்பதன் நலமிகு பாடல் இவை வல்லார்,
வானம்சம்பந்தத் தவரொடும் மன்னி வாழ்வரே!

திருச்சிற்றம்பலம்.